ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
Tuesday, March 2nd, 2021கடந்த அரசாங்த்தின் ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கையும் குறித்த நாடாளுமன்ற அமர்வின்போது விவாதத்திற்கு உட்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|