ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணிநீக்கம் – சிறைச்சாலை ஆணையாளர் தகவல்!

Saturday, August 15th, 2020

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த 15 சிறை அதிகாரிகளும் மஹர, மெகசின், பூஸ்ஸ, கொழும்பு, வெலிகடா, காலி, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்த 10 அதிகாரிகளும் நீர்கொழும்பு சிறைச்சாலையை சேர்ந்த 9 அதிகாரிகளும் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: