ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடிவிட அமைச்சரவை முடிவு!

Friday, July 14th, 2017

ஊழல் ஒழிப்பு செயலாளர் அலுவலகத்தை மூடிவிடுவதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காரியாலயத்தை மூடி விடுவதற்கான தீர்மானம் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2015 ஜூலை 2ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இந்தக் காரியாலயம் திறக்கப்பட்டது. 2016 நவம்பர் 22ம் திகதி அதன் ஒரு வருடப் பதவிக்காலம் முடிந்த பின்னர் மற்றுமொரு பிரேரணையின்படி பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி பதவிக்காலம் மீண்டும் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: