ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகம் தொடர்பில் விசேட அறிக்கை!

Tuesday, May 9th, 2017

 “ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பது தொடர்பில், அதுபற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின் படி தீர்மானிக்கப்படும்” என, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் கீழ் நடத்திச் செல்லப்படும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகத்துக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்கு அல்லது பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கு ஒப்படைக்கப்படும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: