ஊழல்களுக்கு அங்கீகாரம் தேடுகிறார் சுமந்திரன் – குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, June 18th, 2019

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறியதுடன்; தான் ஜனாதிபதியின் நியமனம் என்பதையும் ஏற்பதற்கு தயங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்;, அதை மறைப்பதற்காக அநாகரிகமாக நடந்து தன்னை அச்சுறுத்தினார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –


கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இராஜயாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெற்றது. இதில் நான்; யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன்.


இதன்போது குறித்த கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துவது தொடர்பாக நான் சபையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த விடயம் தொடர்பான சுற்று நிரூபத்தில் 2019.02.13 திகதிய 4ஃ2019 இலக்கம் கொண்ட உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்@ராட்சிகள் அமைச்சு சுற்றறிக்கைக்கு அமைவாக, பிரதேச ஒருங்கிணைப்பாளர் குழுவின் தலைவராக அரசாங்கத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கவும் மற்றும் அக்குழுவின் உபதலைவராக அரசாங்கத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆயினும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பாளர் குழுக் கூட்டங்களை நடாத்தல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்@ராட்சிகள் அமைச்சர் மாண்புமிகு வஜிர அபேவர்தன அவர்கள், வடகிழக்கு பிரதேசத்திற்கு குறிப்பாக வடக்கின் ஐந்து மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களோ அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களோ நியமிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆகவே இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படுகின்ற திணைக்களங்கள் சார்ந்த வேலைத்திட்டங்கள் சட்ட ரீதியானதா? தலைவர்கள் நியமிக்கப்படவில்லை என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். எனவே உங்களை நியமித்துயார் என்பதைத் தெளிவுபடுத்துமாறு கேட்டிருந்தேன்.


அதற்கு பதிலளித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் அவர்கள், நாடாளுமன்றத்தில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இக்கேள்வியை எழுப்பிய போது தானும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் சபையில் இருந்ததாகவும் அதற்கு அமைச்சர் அவர்கள் பதிலளித்து விட்டார் எனவும் தெரிவித்தார்.


அதன்போது மாண்புமிகு அமைச்சர் தான் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளாரே? எனவே இக்கூட்டம் சட்டரீதியானதா என மீண்டும் கேட்டபோது, ஏற்கனவே தந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்படவில்லை எனவும் இக்கூட்டம் சட்ட ரீதியானது எனவும் இக்கூட்டம் சட்ட பூர்வமற்றது எனக் கருதினால் வெளியே போகலாம் இதற்குமேல் வாதம் செய்யமுடியாது. ஓலிவாங்கியை வாங்குங்கள் பிரதேச செயலக ஊழியர்களுக்கு கடுந்தொனியில் கூறினார். இருந்தும் உங்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கியதன் அடிப்படையில் கூட்டம் கூட்டப்பட்டதா, என கேட்டபோது வெளியே போகலாம் என மீண்டும் அச்சுறுத்தினார்.


அதன்போது குறுக்கிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா அவர்கள் கூட்டத்தைக் குழப்ப இடமளிக்மாட்டோம் நீங்கள் இந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப பிரதேசசபை உறுப்பினரா? மாகாணசபை உறுப்பினரா? எனவும் நான் அதிகாரம்பெற்ற அமைச்சராக இக்கூட்டத்தைக் தலைமைதாங்குகிறேன் என கடுந்தொனியில் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக பிரதேச செயலத்தின் அனுமதியுடன்தான் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.


முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

Related posts: