ஊர்காவற்றுறை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Friday, January 6th, 2017ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் மற்றும் வாத்தியக் கருவிகள் வழங்கிவைக்கப் பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி இருதய ஆண்டவர் கற்றல் மண்டபத்துக்கான தளபாடங்கள் , சென்.செபஸ்ரியார் முன்பள்ளி மற்றும் எழுவைதீவு தோமையார் முன்பள்ளி அகியன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் குறித்த அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இன்றையதினம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு குறித்த அமைப்புகளின் நிர்வாகத்தினரிடம் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதநயினார் ஜெயகாந்தன் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|