ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

Thursday, November 12th, 2020

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நேற்றையதினம் (11) சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து சபை உறுப்பிர்னர்களிடம் விவாதத்திற்கு விடப்பட்ட வரவுசெலவு திட்ட முன்மொழிவு சபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 7 உறுப்பினர்களையும், தமிழரசுக் கட்சியின் 5 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் தேசிய காங்கிரஸ் உரு உறுப்பினர் என 13 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள சபையில், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு தனிக்கட்சியால் ஆட்சியமைப்பதற்கு தேவையான முழுமையான ஆசனப் பலத்துடன்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றிகண்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் சபையின் தவிசாளர் ஜெயகாந்தன் கருத்து தெரிவிக்கையில் – எமது பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட சேவைகளையும் தேவைப்பாடுகளையும் நாம் எமக்குள்ள வழங்களைக்கொண்டு திறம்பட செய்து வருகின்றோம்.

எமது சபையும் மிகவும் வருமானம் குறைந்த சபையாக காணப்படுவதால் இருக்கின்ற வருமானங்களை கொண்டே சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாதது புதிய பல வருமானங்களை ஈட்டக்கூடிய நலத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை நாம் உள்ளுராட்சி மன்ற அமைச்சிடமும் ஏனைய அமைச்சுக்களிடமும் கோரியுள்ளோம்.

குறிப்பாக எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசில் ஒரு பலம் மிக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பதனால் அவரூடாக நாம் எமது பகுதிக்கான பல்வேறு வருவாயை ஈட்டக்கூடிய திட்டங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தவுள்ளோம். கடந்த காலங்களிலும் அவ்வாறான பல திட்டங்களை நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக எமது பகுதிக்கு பெற்றுக்கொடுத்து எமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுத்திருக்கின்றோம்.

அந்தவகையில் எமது பிரதேசத்தினதும் மக்களினதும் நலன்களை கருத்திற்கொண்டு எமது கட்சியின் உறுப்பினர்களோடு சபையிலுள்ள ஏனைய கட்சி சர்ந்த உறுப்பினர்களாலும்  என்னால் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts: