ஊர்காவற்றுறை படுகொலை: வைத்திய பரிசோதனை அறிக்கை வெளியானது!

Wednesday, January 25th, 2017

பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான முக்கிய காரணம் என நேற்றையதினம் ஊர்காவற்துறை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் தொடர்பான வைத்திய பரிசோதனை அறிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான முக்கிய காரணமாகும்.

கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுகின்றது.

தோள் மற்றும் முதுகுப்பகுதியில் எலும்புகள் முறிவடைந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்துறையில் கொள்ளையிட வந்தவர்களால் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று மிகக் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர்களை பலத்த பாதுகாப்பின் மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிவரை இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts:

பெண் தலைமைக் குடும்ப மாணவர் விலகலே அதிகம்  - புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டத...
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் ...
சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல் - தீர்மானங்கள் இந்திய பிரதமர் நரேந...