ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை மீண்டும் ஆரம்பம்!

Tuesday, October 23rd, 2018

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடற்பாதை சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட கடற்பாதை திருத்த வேலைகளுக்காக சில நாட்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

தற்போது இப்பாதைக்கான திருத்த வேலைகள் யாவும் நிறைவுற்றதை அடுத்து பாதை சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையில் இந்த கடற்பாதை சேவையினால் கூடுதலான மக்கள் தினமும் பயணித்து வருகின்றனர். அதேசமயம் நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவான் துறைக்கும் இடையில் மீண்டும் குமுதினி படகின் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குமுதினி படகு திடீரென பழுதடைந்ததால் அதன் சேவை பாதிக்கப்பட்டது. படகு மீளவும் திருத்தியமைக்கப்பட்டு அதன் சேவை ஆரம்பித்தும் வைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

Related posts: