ஊர்காவற்றுறை கடற்கரை வீதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன!

Wednesday, August 8th, 2018

ஊர்காவற்றுறை கடற்றொழிலாழர்களது நலன்கருதி கடற்கரையை அண்டிய வீதிகளுக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் வழிநடத்தலில் சூரியக் கதிர் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் இதர மக்கள் அதிகளவில் தொழில் துறைகளை மேற்கொள்ளும் இடங்களில் இரவு நேரங்களில் வெளிச்சமின்மை காரணமாக பல இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாகவும் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய கட்சியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் கிளாறன்ஸ் அவர்களால் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம் நிதி ஒதக்கீட செய்யப்பட்டு கடற்கரை வீதிக்கு 4 சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

38728020_1185334571604880_8650135117068500992_n (1)
38624521_232007097502342_9181280803303194624_n (1)

Related posts: