ஊர்காவற்றுறையில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அனுதாபம் தெரிவிப்பு!

ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் கர்ப்பிணி தாயான கம்சிகாவின் (வயது24) இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) நேரில் சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண், வீட்டில் தனியாக இருந்த சமயம் வீட்டிற்குச் சென்ற விஷமிகள் குழுவொன்று இளம் பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலியானவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் இரு நபர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறைப் பொலிஸார் அவர்களை மீட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்துப் பொலிஸாருக்கும்,பொதுமக்களுக்குமிடையில் கடுமையான தர்க்கம் மூண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது.
ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரான ஞானசேகரனின் மனைவியே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்ட கம்சியா என்றும் இவர் கர்பவதியாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு சென்ற யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கோண்டதுடன் அவர்களுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார் இதன்போது கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதயினார் ஜெயகாந்தன் உடனிருந்தார்.
Related posts:
|
|