ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்துத் தரக் கோரிக்கை!

Thursday, February 8th, 2018

ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்கென எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாததால் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் பெரும் இடைஞ்சலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கொரிக்கை விடுத்தள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண நகரில் இருந்து இருபது கிலோ மீற்றருக்கும் அப்பாற்பட்ட பிரதேசமாக ஊர்காவற்றுறை பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு ஏனைய அனைத்து வசதிகளும் இருக்கின்ற பட்சத்திலும் எரிபொருள் நிலையம் இல்லை. எரிபொருள் நிரப்புவதற்காக யாழ்ப்பாண நகரப்பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கு எரிபொருள் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. காரைநகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்தும் எரிபொருள் பெறுவதில் நாம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம். ஆகவே எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைத்துத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.

Related posts: