ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் – சமுர்த்திப் பயனாளிகளிடம் அறவிட்ட பணத்தை கையாடிய சமுர்த்தி அலுவலர்!

samurdi Tuesday, November 14th, 2017

சமுர்த்திப் பயனாளிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தை குறித்த பயனாளிகளின் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடாது மோசடி செய்த சம்பவம் ஊர்காவற்துறைப் பிரதேச செயலர் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக சமுர்த்திப் பயனாளிகள் சிலரால் பிரதேச செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட J/56 பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகள் தெரிவிக்கும் போது,

எமது பகுதியில் கடமையில் இருந்த சமுர்த்தி அலுவலரிடம் தமது பிள்ளைகளின் பெயரில் வைப்பிலிடுமாறு பணத்தை வழங்கியிருந்தோம். சில காலம் சென்ற நிலையில் தற்போது எமது பிள்ளைகளின் சேமிப்பு புத்தகத்தை சமுர்த்தி வங்கிக்கு கொண்டு சென்று மீதி;யைப் பார்த்த போது குறித்த பணம் எமது பிள்ளைகளின் சேமிப்புப் புத்தகத்தில் போடப்படாமை தெரிய வந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாம் பிரதேச செயலரிடம் முறையிட்ட நிலையில் குறித்த அதிகாரியிடம் இருந்து சிலரது பணம் மீள வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சிலரது பணம் இன்னமும் வழங்கப்படவில்லை.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரும் தற்போது வேறு பகுதிக்கு கடமைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புhமர மக்களின் பணத்தை இவ்வாறு மோசடி செய்த குறித்த உத்தியோகத்தர் மீது உடனடியாக எந்த தயவுமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அதிகாரிகள் எமது பணத்தை மீளப் பெற்றுத்தருவதில் அக்கறை காட்டுகின்றமை எமக்கு வேதனையளிக்கிறது.

இதேவேளை குறித்த அதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்ற அனலைதீவுப் பகுதியிலும் இவ்வாறான மோசடி ஒன்றுடன் தொடர்புபட்டு பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அந்த அதிகாரி தற்போது அலுவலகத்துக்குள்; மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் பிரதேச செயலகப் பகுதியில் குறித்த அதிகாரி கடமையாற்றிய பிரிவுகளில் மேலதிகமாக இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் சமுர்த்திப் பயனாளிகள் மத்தியில் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடுகள் பெ...
இலங்கைக்கு ஆபத்து – பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கை!
இன்று நள்ளிரவு எரிபொருள் விலை குறைப்பு!
துப்பாக்கி சூட்டினால்தான் மாணவன் உயிரிழந்தார் - நீதிபதி அறிக்கை!
எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் தபால் ஊழியர்கள்  தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!