ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

Tuesday, March 14th, 2017

யாழ்.ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண்ணான ஹம்சிகாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரினதும் விளக்கமறியல் எதிர்வரும்-20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கர்ப்பிணிப் பெண்ணின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை(13) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம். எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீதவான் நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Related posts: