ஊர்காவற்துறையில் தோல்வியில் முடிந்தது தேடுதல் நடவடிக்கை!

பொலிஸாருககு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறையில் இன்று(29.07.2020) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தோல்வியில் நிறைடைந்துள்ளது.
கடந்த காலத்தில் புலிகள், இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி. போன்றவற்றினால் காலத்துக்கு காலம் பயன்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தினுள் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தகவலினையடுத்து நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பொலிஸார் இன்று கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தினார்கள்.
எனினும், சந்தேகத்திற்கு இடமான எவ்வித பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், தீவகத்தில் காணப்படுகின்ற பாழடைந்த கிணறுகளில் தேடுதல் நடத்தினால் மனித எச்சங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஈ.பி.டி.பி. கட்சிக்கு சேறு பூசும் நோக்கில் தெரிவித்திருந்தார்.
அப்போது குறித்த கருத்துக்கு பதில் அளித்திருந்த தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த தேடுதல் நடவடிக்கைகளை தான் வரவேற்பதாகவும், இதன்மூலமாவது பாழடைந்த கிணறுகள் துப்பரவு செய்யப்பட்டு எமது மக்களின் பயன்பாட்டிற்கு உதவும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தினம் நெருங்கின்ற சூழலில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|