ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர் சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?

Tuesday, February 28th, 2017

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழில் எரிபொருள் நிரப்பியமை சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி இதை நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஊர்காவற்துறையில் கொலை நடைபெற்ற தினத்தன்று குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமை சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சி.சி.டி.வி கெமராவின் பதிவுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னரும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.எனினும் இதுவரை அந்த பதிவுகள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குறிப்பிட்ட சி.சி.டி.வி பதிவுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் ஏ.எம்.எம். றியாழ் இன்று மீண்டும் உத்தரவிட்டதுடன் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

cats-25

Related posts: