ஊருக்கு உபதேசம் உனக்கில்லையா யாழ் மாநகர முதல்வா – பாஷையூர் மக்கள் கேள்வி!
Monday, September 2nd, 2019பாஷையூர் பொது சந்ததைக்கு அருகே திண்மக் கழிவுகள் அகற்றப்படாது காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடும் விசனதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பொதுச்சந்தை நாளாந்தம் பல நூறு மக்கள் பயன்படுத்தி தமது தேவைப்பாடுகளை பெற்றுக்கொள்வதால் இப்பகுதி சன நெரிசல் மிக்கதாக காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சந்தைக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஏற்கனவே இப்பகுதியில் குப்பை கொட்டிய சலருக்கு முதல்வர் நேரடியாகவே சென்று நடவடிக்கையும் எடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஆர்னோல்ட்டின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் முதல்வரது வீட்டில் இருந்த திண்மக் கமிவுகளை குறித்த இடத்தில் கொட்டிச் சென்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே குப்பை கொட்டியதால் அதுவும் முதல்வரால் நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|