ஊரடங்கு நடைமுறையை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை – பொலிசார் அறிவிப்பு!

Saturday, August 21st, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்வதற்கு விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவுமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதற்கென தனியான பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று இரவுமுதல் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் படி அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே வெளியே பயணிக்க முடியுமெனவும், அவ்வாறு பயணிப்பவர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று இரவு 10 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: