ஊரடங்கு தொடர்பில் இந்தவாரம் முக்கிய தீர்மானம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, November 19th, 2020

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சட்டங்களை மீறிய 312 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் –

கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணக்கை 20 ஆயிரத்தை அண்மித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் நாம் நாளாந்தம் ஆராய்ந்து வருகிறோம்.சில தோட்டங்கள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புக்கள் ஆகியவற்றை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

அதுதவிர்த்து ஏனைய பகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து இந்த வாரத்திற்குள் தீர்மானமொன்றை எட்ட எதிர்பார்த்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: