ஊரடங்கு சட்ட காலத்தில் 43 பிரிவினருக்கு வெளியில் செல்ல அனுமதி – பொலிஸ் தலைமையகம்!

Wednesday, April 8th, 2020

நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையிலும் ஏனைய மாவட்டங்களில் பகுதியளவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 43 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி 43 பிரிவினர் வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது –

அதற்கமைய, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், அனைத்து வெளிவிவகார அலுவலகங்கள், வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, விவசாயதுறை அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார திணைக்களம், சுகாதார சேவை திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், விவசாய திணைக்களம், ரயில்வே திணைக்களம், சிறைச்சாலை திணைக்களம், தபால் திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம், தீயணைப்பு திணைக்களம், மாவட்ட செயலக அலுவலகம், பிரதேச செயலக அலுவலகம், இலங்கை சுங்க பிரிவு, இலங்கை விமான சேவை, விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், இலங்கை டெலிகொம் நிறுவனம், அரச அச்சிடல் திணைக்களம், பெற்ரோலிய கூட்டுத்தாபனம், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், பெற்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சிய பிரிவு, இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை முதலீட்டு சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மின்சார தனியார் நிறுவனம், நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, இலங்கை துறைமுக அதிகாரசபை, அனைத்து தனியார் மற்றும் அரச வங்கி, இலங்கை கப்பல் நிறுவனம், நுகர்வோர் சேவை அதிகாரசபை, அனைத்து தனியார் வைத்தியசாலைகள், அனைத்து காப்புறுதி நிறுவனங்கள், அனைத்து ஊடக நிறுவனங்கள், அனைத்து மாகாண சபை நிறுவனங்கள் என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வெளியில் செல்ல முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: