ஊரடங்கு சட்டம் : மீறிய குற்றச்சாட்டில் 10,039 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!
Friday, April 3rd, 2020கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 39 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ம் திகதிமுதல் இன்றுவரையான காலப்பகுதியில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 962,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|