ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றுமுதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.
பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜுன் 6ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!
எரிவாயு விலையை குறைக்க ஆலோசனை?
வாகனங்களை பதிவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிய அரசாங்க கணக்குக் குழுவினால் உப குழு நிய...
|
|