ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!

Monday, March 23rd, 2020

கடந்த வெள்ளி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை சில பகுதிகளில் நீக்கப்பட்டிருந்தது.

கொழும்பு, புத்தளம், கம்பஹா மற்றும் வடமாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூரியுள்ளனர்

Related posts: