ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடக பிரிவு!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 660 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 256 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்’காக சுகாதார தரப்பினரது ஆலோசனைக்க அமைய கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை அமுல்ப்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்ட நடைமுறைகாலத்தில் 60 ஆயிரத்து 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 924 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்து 193 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் !
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடவடிக்கை!
எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதியில்லை !
|
|