ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இதுவரை 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 58 ஆயிரத்து 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதித் தடையில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 28 வாகனங்களும் மற்றும் ஆயிரத்து 807 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் மாதம் 8 முதல் 10 திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு!
நாடாளுமன்ற தேர்தல்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை 33 முனைகளில் போட்டி- 3 சுயேட்சைக் குழுக்களின் ம...
கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் - ஊடகங்கள் மத்தியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|