ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல் ஊரடங்கு உத்தவை மீறி பயணித்த 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜுலை 5 ஆம் திகதி நியமனக்கடிதம்!
புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் - இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறி...
பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!
|
|