ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோலுக்கு எதிராக வழக்கு – காவல்துறை ஊடகப்பிரிவு!
Saturday, May 23rd, 2020நேற்றையதினம் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் 138 வாகனங்களையும் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 17 ஆயிரத்து 460 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக 18 ஆயிரத்து 992 நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
முதியோர் பராமரிப்புக்கு நடவடிக்கை!
சுன்னாகம் பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் திடீர் இடமாற்றம்!
சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் - வெளியானது அதி விசேட வர்த்தமானி அ...
|
|