ஊரடங்கு உத்தரவு: மீறிய 23,519 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
Monday, April 13th, 2020ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கிராம மட்டங்களில் இடம்பெறும் கலை, கலாசார கொண்டாட்டங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலைவரை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 1,535 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 385 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
கல்வியமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்ய தீர்மானம்!
கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!
சதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் நஷ்டம்!
|
|