ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் – பொது போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Monday, April 20th, 2020

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது போக்குவரத்து இடம்பெறாது என்றும் பொதுப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது..

இன்றைய தினம் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் புகையிரத மற்றும் பேருந்து சேவைகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் சாதாரணமாக முன்னெடுக்கப்படும் பயணிகள் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் பேருந்துகளில் உள்ள ஆசன வரிசையில் ஒருவர் மாத்திரமே அமர முடியும் எனவும் முடியுமான அளவு சமூக இடைவெளியை பேணுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது..

அரச ஊழியர்கள் தாம் மார்ச் மாதத்திற்காக பெற்றுக்கொண்ட பருவக்கால சீட்டை பயன்படுத்த முடியும் என்பதோடு கைகளை கழுவ ரயில்களிலும், பேருந்துகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 4700 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளதுடன் இன்றையதினம் நான்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் இன்றையதினம் யபழ் மாவட்டத்திலும் தளர்த்தப்பட்டுள்ளமையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை இடம்பெற்றுள்ளது.

இதில் அரச அலுவலக பணியார்கள் தொழில் அடையாள அட்டை பார்தே போருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு பொலிஸ் பாஸ் அனுமதி வேண்டு என்பதுடன் சாதாரண பொதுமக்கள் பயணிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: