ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டது – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட 7 மணித்தியாலங்களுக்குள் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் டிப்போ மட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை எனவும் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே, மாகாணங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டாலும், மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நடைபெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: