ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது – இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, May 6th, 2020ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாவட்டங்களுக்குள் மாத்திரம் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் இஷட் வடிவில் உட்கார அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், கடமைகளில் ஈடுபடும் பயணிகளே அதிகளவில் பேருந்துகளில் பயணிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற்ப பயணிகளைக் கொண்டு செல்ல முடியுமா என்பது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பயணிகள் போக்குவரத்துக்காக பேருந்து சேவைகள் இடம்பெற்று வரும் போதிலும், ஊழியர்களின் போக்குவரத்துக்காக ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|