ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!
Tuesday, April 28th, 2020இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 303 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இலங்கையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 10 ஆயிரத்து 560 வாகனங்களும் இந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|