ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, September 18th, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக 17 ஆயிரம் பேருந்துகளுக்கு உதிரிபாகங்களை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதுதவிர, அடுத்த வாரம்முதல் நிவாரண பொதி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது. குறிப்பாக பேருந்து உரிமையாளர்களுக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்து சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். அவர்கள் இடையிடையே சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

மீண்டும் பேருந்துகளை சேவைக்கு ஈடுபடுத்துவதற்கு முன்னர் தேவையான விடயங்களுக்குமான நிவாரணத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது எனவும’; தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம டயர் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட விடயங்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: