ஊரங்கு உத்தரவவை மீறினால் கைது – சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா எச்சரிக்கை!
Saturday, May 16th, 2020நாளைதினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்றும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எவரையும் கைது செய்ய நாளை நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வாரத்திலும் இந்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பொலிஸார் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சில இடங்களில் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்றும் அஜித் ரோஹானா தெரிவித்தார்.
மேலும் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க மறுக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|