ஊதியக் கொள்கையை மாற்றுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி!

Friday, November 17th, 2017

அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிக்க பாதீடு மூலம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய வேதன கொள்கை முழுமையாக சிதைந்துவிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, அந்த சங்கத்தின் செயலாளர் நலின் டி ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய வேதன கொள்கை 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுஅதன் மூலம், வேதன அதிகரிப்பு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சில தரப்புகளின் போலி கோசங்கள் இல்லாது செய்யப்பட்டது.அதன் மூலம் நாட்டிற்கும் நன்மை ஏற்பட்டது

தேசிய வேதன கொள்கையை மாற்றும் வகையில் புதிய பாதீடில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுதேசிய வேதன கொள்கையை மாற்ற வேண்டும் எனில் அது தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: