ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கபடமாட்டாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Friday, December 13th, 2019

தனது ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் விடுக்கபடமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு சாதாரண விமர்சனத்திற்கும் இடமுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் நற்பெயரை பாதுகாத்து அனைத்து ஊடக நிறுவனங்களும் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என எதிர்பார்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், ஊடக நிறுவனங்களின் பிரதானிகளும் இடையிலான சந்திப்பு ஒன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பல்வேறு எதிர்பார்புகளுக்கு மத்தியில் தன்னை ஜனாதிபதியாக்கியதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி, அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரின் செயற்றிறனை மேம்படுத்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

இந்த சவாலை வெற்றிக்கொள்ள ஊடகங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலீடு மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார உறவுகளை கட்டியெழுப்ப நாடு பற்றிய பிம்பம் முக்கியமானது எனவும் அவ்வாறு நாடு பற்றிய பிம்பத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் கூறினார்.

மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவிஸ் தூதரக அதிகாரி விடயத்தில் ஊடகங்கள் செயற்பட்ட விடயத்தை பாராட்டிய ஜனாதிபதி ஆனால் இந்த விடயத்தில் சர்வதேச ஊடகங்கள் செயற்பட்ட விதம் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சரிசெய்ய வேண்டியதும் ஊடகங்களின் கடமை என தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் உள்ள சுவர்களில் தற்போது ஓவியங்கள் வரையப்படுவது தொடர்பிலும் ஊடகங்களை தெளிவுபடுத்தினார்.

அவ்வாறான ஒரு செயற்றிட்டம் எவருடைய வேண்டுகோளின் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மாறாக அந்த திட்டம் நாட்டை நேசிக்கும் இளைஞர்கள் முன்வந்து முன்னெடுக்கும் ஒன்று எனவும் குறிப்பிட்டார். இதன் போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை பிரதிநிதிதுவபடுத்தி பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.

Related posts:

வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை - கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங...
2020 நாடாளுமன்ற தேர்தல் : முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியாகும் - மஹிந்த...
இரு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை –இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக...