ஊடகவியலாளர் லசந்தவின் சடலம் நாளையதினம் தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
Monday, September 26th, 2016
சண்டே லீடர் முன்னணி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை(27) பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலமானது நாளை இவ்வாறு தோண்டி எடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30 மணிக்கு இவ்வாறு சடலமானது தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது பொரளை கனத்தையில் உள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அப்போது முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் சிக்கல், முரண்பாடுகள் உள்ளதால் அதனை நிவர்த்தி செய்ய இவ்வாறு சடலமானது தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
Related posts:
|
|