ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு: யாழ்.நகரில் போராட்டம்!

Wednesday, May 30th, 2018

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும் தாக்குதல் தாரிகளை கைதுசெய்ய வலியுறுத்தியும்  யாழ்.நகரில் மாபெரும் போராட்டம் இன்று  (30)முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலயங்கள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் அதிகாலை பிரதேச செய்தியாளர், ஒருவர் யாழ்.கொழும்புத்துறை துண்டிப்பகுதியில் வைத்து வாளால் வெட்டுப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், ஊடகவியலாளர் மீது வெட்டியவர்களை கைதுசெய்ய வலியுறுத்தியும் இந்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்த போராட்டத்தின் போது, அறிவாயுதம் ஏந்தும் பத்திரிகை மீது அழிவாயுதம் ஏந்துவதாக, நல்லாட்சி அரசே நல்லாட்சி அரசே ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை நிறுத்து பொலிஸாரின் தாமதம் வன்முறையாளர்களிற்கு  ஊக்கம் எழுதுகோளின் நியாயத்திற்கு வாள்வெட்டு தான் பதிலா பத்திரிகையாளர் தாக்குதலுக்கு உடனடியாக நடவடிக்கை எடு, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு, அரசாங்கத்திற்கும், தாக்குதல் தாரிகளுக்கும் எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் கோசமிட்டனர்.

இந்த போராட்டத்தில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சியிகளின் முக்கியஸ்தர்கள் பொத நலன் விரும்பிக் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்தகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: