ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் அமுலாக்கப்படும் – ஊடகத்துறை அமைச்சர்

ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டம் அமுலாகப்படவுள்ளதாகவும் இதுகுறித்து வீடமைப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்
வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கும் வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
ஊடக அமைச்சு அமுலாக்கும் ஒன்றாக வாருங்கள் மூச்சுவிடுங்கள் என்ற பெயரிலான திட்டத்தின்கீழ் தென்னிலங்கை செய்தியாளர்கள் சிலர் வடக்கு சென்றிருந்தார்கள்.
இந்த பயணத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடுகளையும், முல்லைத்தீவில் ஒருவீடடையும் அமைக்க அடித்தளம் இடப்பட்டதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|