ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி ஊடக புலமைப்பரிசில் திட்டம்!

Tuesday, June 27th, 2017

ஊடக அமைச்சு முன்னெடுத்துவரும் அசிதிசி ஊடக புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வருடாந்தம் வழங்கப்படும் புலைமைப்பரிசில்கள் இம்முறையும் வழங்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு தமது தொழிற்துறை ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகை செய்யும் வகையில் அசிதிசி என்ற இந்த ஊடக புலைமைப்பரிசில் திட்டத்தினால் இம்முறையும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.3 வருட கால சேவையை பூர்த்தி செய்த அங்கீகரிக்கப்பட்ட இலத்திரணியல், அச்சுஊடகம் ஆகியவற்றில் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் 18 க்கும் 55 வயதிற்கும் இடைப்பட்ட முழுநேர-பகுதிநேர ஊடகவியலாளர்கள் , மாகாண ஊடகவியலாளர்கள், இணையத்தள ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதற்காக விண்ணப்பிக்கமுடியும்.

தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தமது கற்கை நெறிக்காக ஆகக்கூடியது ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும். ஏற்கனவே அசிதிசி புலமைப்பரிசில் பெற்றோருக்கு இது வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் பணிப்பாளர் ( ஊடகம்), நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு , இலக்கம் 163 , கிருலப்பனை அவனியூ , பொல்லேங்கொட , கொழும்பு 05 என்ற முகவரிக்கு 2017 ஜுலை மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவேண்டும்.இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011 – 2513 645,  011 – 2513 459 , 011 – 2513 460 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும் மற்றும் www.media.gov.lk   (https://tamil.media.gov.lk/) என்ற இணையத்தளத்திலிருந்தும் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

Related posts: