ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பரிகாரம் கிடைத்தது.!

Wednesday, September 28th, 2016

ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமைக்காக கொழும்பின் பிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தன்னை பதவி நீக்கியமைக்கு எதிராக குறித்த ஆசிரியை தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைகளின் போதே, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அண்மையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது, கொழும்பின் பிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர், தான் பணி புரியும் பாடசாலையில் இடம்பெறுவதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் வழங்கினார்.

இதனால் அவரை பணி நீக்கம் செய்ய குறித்த பாடசாலை உத்தரவு பிறப்பித்தது.  இதனையடுத்து அப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக, சம்பந்தப்பட்ட ஆசிரியை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதில் தன்னை பணிநீக்கம் செய்தமையை சட்டவிரோதமானது என அறிவிக்கும் படி அவர் கோரியிருந்தார். இந்தநிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பணி நீக்கம் காரணமாக குறித்த ஆசிரியையின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் எனவே பிரதிவாதிகள் இருவரும் ஒரு இலட்சம் ரூபாய் நஸ்டஈடு பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அரசாங்க ஊழியர்களின் விளக்கமளிக்கும் மற்றும் கருத்து வெளியிடும் உரிமையை உறுதி செய்யும் அதி முக்கியமான தீர்ப்பு இதுவென, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

41192650

Related posts: