ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்ங்கள் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரிக்கை!

மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு ஊடகங்களின் மூலம் அவர்களுக்கான கூடுதலான வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் வரை தேசிய நலன் கருதி இந்த வேலைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு கோரியதுடன் கல்விக்கென பிரத்தியேகமான அலைவரிசைகள் விரைவில் ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மாணவர்களின் கல்வி நலன் கருதி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தனியான அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்க உள்ளது பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு 5 ஆயிரம் தொலைக்காட்சிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே இலங்கையில் ஆங்கில மொழி மூலம் 2 ஆயிரத்து 727 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கிறார்கள். இது ஆசிரியர்களின் எண்ணிக்கையில் ஒன்று தசம் ஒரு சதவீதம் ஆகும். வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
சிங்கள மொழி மூலம் இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் கற்பிப்பதோடு தமிழ்மொழி மூலம் 60 ஆயிரம் ஆசிரியர்களை கற்பிப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|