உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம்!

PAYE Tax என்ற உழைக்கும்போது செலுத்தும் வரியின் அண்மைய திருத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் வழங்க செயலாளர் இணங்கியுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
நேற்று மாலை (17) இருதரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த நிலையில், ஜனாதிபதியுடன் தாம் விரைவில் நடத்தவுள்ள சந்திப்பில், இது தொடர்பான தீர்க்கமான தீர்வு எட்டப்படும் என்று தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, வரிவிதிப்பு பிரச்சினை, மின்கட்டண உயர்வு மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மக்கள் விரோதமான முடிவுகளுக்கு எதிராக கடந்த 15ஆம் திகதியன்று நாடு முழுவதும் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|