உள்ளூர் வழங்களை கொண்டு பெண்களை பொருளாதாரத்தால் வலுவூட்ட வேண்டும். – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Monday, December 20th, 2021

உள்ளூர் வழங்களை கொண்டு பெண்களை பொருளாதாரத்தில் வலுவூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்

அனுசியா ஜெயகாந்த் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் குறிப்பாக பெண்களின் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் இந்த திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவெர் மேலும் கூறுகையில்  –

தற்போது நாட்டில் வாழும் மக்களுடன் நாடும் பொருளாதார ரீதியில் பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்கின்றது. கொரோனாவின் தாக்கம் எமது மக்களை குறிப்பாக அன்றாடம் உழைத்து தமது குடும்ப பொருளாதாரத்தை முன்னெடுத்து வரும் குடும்பங்கபங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ளும் பொறிமுறையிலும் பல சவால்களை எதிர்கொண்டு நிற்கின்றனர்.

இத்தகைய நிலையில் பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்காக பல தரப்பினரும் பல்வேறு கலந்தரையாடல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டிருந்தாலும் அவை ஒரு நிலையான பொருளாதாரத்தை கொடுப்பதற்கான வழிவகைகளை  கொடுக்கவில்லை

வெறுமனே ஆலோசனைகளை மட்டும் ஆராய்ந்துகொண்டிராது நடைமுறையில் திட்டங்களை கொண்டு செல்லக் கூடிய வகையில் கிராமங்களில் காணப்படும் தேவைப்பாடுகளை ஆராய்ந்து குறிப்பாக அந்தந்த பிரதேச சபைகளின் பெண் உறுப்பினர்களையும் சமூக ஆர்வலர்களையும் கொண்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஒரு பொறிமுயையூடாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்..

குறிப்பாக தீவக பிரதேசத்தில் பிரதானமாக  காணப்படும் வளங்களைக்கொண்டு கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் குறிப்பாக பெண்களின் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றன.

வேலணை பிரதேசத்தில் பிரதான தொழில் தரும் வளமாக கடற்றொழில் காணப்படுகின்றது. அத்துடன் அதே சமாந்தர நிலையில் பனைவளமும் காணப்படுகின்றது. ஆனால் கடல் வளத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பனைவளத்திற்கு கொடுப்பது குறவவாகவே காணப்படுகின்றது.

எமது பிரதேசத்தில் சுமார் 275 க்கும் மேற்பட்ட பெண்கள்  குறித்த உற்பத்திகளை செய்தாலும் அதை அவர்கள் முன்னெடுப்பதில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்ய பொருளாதார நெருக்கடி – அவற்றை சந்தைப்படுத்தவதில் எதிர்நோக்கும் சவால்கள் ௲  இடைத்தரகர் ஊடான விற்பனை ௲ உள்ளிட்ட பல காணப்படுகின்றன. அவர்களது உழைப்புகளை இடைத்தரகர்களால் சுரண்டப்படும் நிலை கணப்படுகின்றது.

அதேபோல பனை சார் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான நரடமுறையை நாம் கொண்டிருக்கவில்லை. நாட்டில் தற்போது கிராமிய வளங்களை கொண்டு தொழில் முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமாக பலர் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த குறித்த தரப்பினரிடம் பொருளாதார வளம் இன்மையான நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக பெண்களால் இந்த பனைவளம் சார் கைவினை உற்பத்திகளை முன்னெடுக்க முடியுமாக இருந்தாலும் அவர்களுக்கான உலக சந்தைக்கு ஏற்ற வகையில் நவீனத்துவத்துடன் கூடிய தரமான உற்பத்திகளை உற்பத்தி செய்யும் நுட்பங்கள் பொறிமுறைகளை வழங்குவதற்கு துறைசார் பயிற்சிகள் வழங்கப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

அதேபோன்று தற்போது நாட்டில் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு வருகின்றது. பல பொருட்களுக்கான இறக்குதிக்கும் தடை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு ஈடு செய்யும் வகையில் பனைவளத்தை சாதகமாக்கி கொள்ளமுடியும்.

அந்தவகையில் சர்வதேச சந்தைக்கு ஏற்றவகையில் பனைசார் உற்பத்தி செய்வதற்கு பெண்களுக்கு நாம் வலுவூட்டல்லளை கொடுப்பதுடன் அவர்களதுது பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கும் பொறிமுறையை காணவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: