உள்ளூர் தொளிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் – யாழ்.மாநகரசபை அமர்வில் றீகன் வலியுறுத்து!

Friday, September 6th, 2019

யாழ்.மாநகரசபைக்கென புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடப்பணிகளுக்காக தமிழ் இளைஞர்களை இணைத்து மேற்கொள்ள வேண்டும் என யாழ்.மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் துணை முதல்வருமாகிய துரைராசா இளங்கோ (றீகன்) கோரிக்கை முன்வைத்திருந்தார்.

யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இதன் போது யாழ்.மாநகரசபைக்கென 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளாக உள்@ர் தொழிலாளிகளை இணைத்து வேலைகள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இதேவேளை இக்கட்டிடப்பணிகளை வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னெடுக்க வேண்டுமென்றும் றீகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல வருட காலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கும் பொருட்டு யாழ்.மாநகர முதல்வரை இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவன்!
அனர்த்தங்களின் போது அழைக்க விசேட இலக்கம்!
அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ம...
தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன - களப்பணியாற்ற தயராகுங்கள்...
வாக்களிக்கும் முறைமையில் விசேட மாற்றம் - மஹிந்த தேஷப்ரிய!