உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்!

Saturday, January 28th, 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்தித்து தேர்தல் முன்னகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் மதற்றும் சுயேட்சைக் கழுக்கள் சார்பில் போட்டியிடும் தரப்பினரால் வேட்பு மனுக்கள் தாக்ககல் செய்வது கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முன்னெடுப்புகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வட்டார ரீதியாக விரிவுபடுத்தப்பட்டுவருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வழமைபோன்று ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சி தனது வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வேட்பாளர்களை சந்தித்துவரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் உதவி நிர்வாக பொறுப்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் பிரசார பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: