உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களும் அழைப்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வேறுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை எனவும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். .
வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
ஐ.தே.க.- ஸ்ரீ.ல.பொ.க தலைமையிலான கூட்டணி ஏற்கனவே தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், வேட்புமனு பரிசீலனைக்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆரம்ப வேலைகளை ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பு மனுத் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன ஆகிய கட்சிகள். உள்ளூராட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு தமது அடிமட்ட அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் மாவட்ட செயலாளர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளைமறுதினம் (23) கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கான அழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ளார்.
இதன்போது தேர்தலை நடத்துவது தொடர்பான சகல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|