உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில்  நாளை !முடிவு!

Wednesday, June 29th, 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான காலஎல்லை நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடுவதற்கான தேவை தமக்கு கிடையாது என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.