உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

அரசியலமைப்பை மறுசீரமைப்பு மூலம் கலப்பு தேர்தல் முறைமையை தயாரித்து உள்ளுராட்சி மன்றங்களுக்காக அதிகூடிய அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஆக்கப்பூர்வமான நடடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
அரசியலமைப்பு, மறுசீரமைப்பு ஊடாக உயரிய சபையான நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் கலப்பு தேர்தல் முறைமை தயாரிக்கப்படும். வாழ்க்கை சுமை அதிகரித்துள்ள மக்களின் நலன்புரி விடயங்களுக்காக புதிய யுத்திகள் கையாளப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று முதல் நேரடியாக வரவு செலவுத் திட்ட விவாதம்!
தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் – ஐ.நா!
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் - தேர்தல்கள் ஆணைக்கு...
|
|