உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானியில் வெளியீடு!

Friday, February 23rd, 2018

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கட்சிகளின் செயலாளர்கள் அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பட்டியல்அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த மாதம் 4 ஆம் அல்லது 5 ஆம் திகதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கானதலைவர்களையும் உப தலைவர்களையும் அறிவிக்கும் நடவடிக்கை இடம்பெறும்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக 364 உறுப்பினர்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தேர்தலில் 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு இதில் 535 பேர் பெண்களாவர்.

Related posts:

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவ...
காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம் - ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே ...
நாட்டு மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம...